காற்றழுத்த தாழ்வு எதிரொலி: அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

சனி, 28 ஜனவரி 2023 (14:00 IST)
இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனை அடுத்து நாளை முதல் அதாவது ஜனவரி 29 முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்