தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குற்றமில்லை