சென்னையில் திடீர் கனமழை.. விடுமுறை நாளில் மழையை ரசிக்கும் பொதுமக்கள்..!

ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (18:27 IST)
சென்னையில் இன்று திடீர் கனமழை பெய்ததை அடுத்து இன்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் மழையை ரசித்து வருகின்றனர் 
 
இன்று சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே மாநில ஆய்வு மையம் எச்சரித்திரிந்த நிலையில் சற்றுமுன் சென்னையில் கன மழை பெய்து வருகிறது.  
 
சென்னை தியாகராஜ நகர், கோடம்பாக்கம், மாம்பலம், அசோக் நகர், கேகே நகர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதேபோல் சேப்பாக்கம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. 
 
இன்று இரவும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் திடீர் மழை காரணமாக தட்பவெப்ப நிலை குளிர்ச்சியாக மாறி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்