வாக்கிடாக்கி மருத்துவமனையாக மாறியது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (16:42 IST)
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வாக்கி டாக்கி மருத்துவமனையாக மாறி இருப்பதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தினமும் ஏராளமான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் கொரோனா வைரஸால் லேசான பாதிப்பு, சிலர் சீரியஸான பாதிப்பு அடைந்த நிலையில் அனுமதிக்கப்படுவதாகவும், இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளையும் நிலை குறித்து உடனடியாக அறிந்து உடனடியாக மருத்துவர்களை அணுகி , காலியாக இருக்கும் பெட் குறித்த தகவல்களை அறிய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
எனவே கொரோனா நோயாளி குறித்து மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கு வாக்கி டாக்கி தற்போது பயன்படுத்தப்படுகின்றன என்றும், தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி இந்த வாக்கி டாக்கி வசதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் 20 பேர்களுக்கு இந்த வாக்கி டாக்கி வழங்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் ஒருவரை ஒருவர் உடனடியாக தொடர்பு கொண்டு நோயாளிகளின் நிலையை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் 
 
மேலும் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நிலை குறித்து உடனடியாக தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் இது உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வசதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து வேறு சில மருத்துவ மனைகளிலும் இதனை விரிவுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் கொரோனா வார்டுகளில் மொத்தம் 20 ஆண்ட்ராய்டு போன்களில் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதன் மூலமும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்