புதுவையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை: சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (14:08 IST)
புதுவையில் விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு  தெரிவித்துள்ளார். 
 
சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை தற்போது மதுரையில் இயங்கி வருகிறது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் புதுவைக்கு தனியாக ஒரு கிளை அமைக்க வேண்டும் என கோரிக்கை பல நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அல்லது ஒரு பெஞ்ச் விரைவில் புதுச்சேரியில் அமைத்து தரப்படும் என்று கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து நீண்ட கால கோரிக்கை விரைவில் நிறைவேற உள்ளதாக புதுவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்