ஜெயலலிதா மரணம் குறித்த மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் அதிரடி..!

புதன், 12 ஏப்ரல் 2023 (18:44 IST)
ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 
 
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பதும் இந்த ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
ஆறுமுகசாமி ஆணைய ஆணைய அறிக்கையின் பெயரில் நடவடிக்கையை கோரி வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்து மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்