உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் என்ற நகரில் உள்ள சலீம்பூர் பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மணமேடையில், மணமக்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்.
அப்போது, உறவினர் ஒருவர், மணமகளின் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய மணமகள் அதை வானை நோக்கி 4 ரவுண்டு சுட்டார்.
இது போலீஸாரின் கவனத்திற்கு வந்த நிலையில், ஹத்ராஸ் ஜங்சன் காவல் அதிகாரி, திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது தொடர்பாக லைசென்ஸ் வைத்திருப்பவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். தலைமறைவான மணமகனை தேடி வருகிறோம் என்று கூறியுள்ளார்.