ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக உத்தரவு

திங்கள், 10 ஏப்ரல் 2023 (18:38 IST)
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக  வேண்டுமென்று கூறியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஆரூத்ரா கோல்ட் நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் கட்டினால் 30 ஆயிரம் வட்டி தருவதாகக் கூறி,  மோசடி செய்து, பெருவாரியான மக்களை ஏமாற்றியுள்ளது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறிய நிலையில் வழக்குப் பதிவு செய்து அந்த நிறுவனத்தின் இயக்குனனர் உட்பட் 21 பேரைக் குற்ற்வாளியாகச் சேர்ந்து,   போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை இயக்குனர் பாஸ்கர், செந்தில்குமார், மாலதி உள்ளிட்ட 11 பேரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சுமார் ரூ.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

மேலும், ஆர்.கே சுரேஷின் வங்கிக் கணக்கிற்கு கோடி கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை போலீஸார் கண்டுபிடித்துள்ள  நிலையில், அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியுள்ள் ஆஜராகவில்லை.

எனவே, ஆர்.கே.சுரேஷின் வழக்கறிஞர்களின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக  வேண்டுமென்று கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்