முதல்வரை சண்டே கூட தொல்லை பண்றாங்க! – வழக்கு தொடர்ந்தவருக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (12:45 IST)
தமிழக முதல்வரை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகள் தொந்தரவு செய்ய கூடாது என மனு அளித்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றது. இதற்காக அடிக்கடி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவேகானந்தன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் முதல்வரை அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் அவசியமில்லாமல் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிடும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசு அதிகாரிகள் முதல்வரை சந்திப்பது அரசு சார்ந்த விஷயம். அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறியுள்ளதுடன், மனு அளித்த விவேகானந்தனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அடுத்த ஒரு வருடத்திற்கு பொதுநல மனு தாக்கல் செய்யவும் தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்