மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினர்கள்: ஜெயரஞ்சனுக்கு துணைத்தலைவர் பதவி

ஞாயிறு, 6 ஜூன் 2021 (12:04 IST)
மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினர்கள்: ஜெயரஞ்சனுக்கு துணைத்தலைவர் பதவி
மாநில வளர்ச்சி குழு ஒன்றை உருவாக்கி அதில் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களை துணை தலைவராகவும் முக ஸ்டாலின் அறிவித்து உத்தரவிட்டுள்ளார் 
 
மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனத்தை சற்றுமுன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இந்த குழுவின் தலைவராக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு
 
பேராசிரியர்‌ திரு. ஜெ. ஜெயரஞ்சன்‌ அவர்கள்‌ மாநில வளர்ச்சி கொள்கைக்‌ குழுவின்‌ துணைத்‌ தலைவர்
 
பேராசிரியர்‌. திரு. இராம. சீனுவாசன்‌ அவர்கள்‌ முழுநேர உறுப்பினர்
 
பேராசிரியர்‌ திரு. ம. விஜயபாஸ்கர்‌,
 
பேராசிரியர்‌ திரு. சுல்தான்‌ அஹ்மத்‌ இஸ்மாயில்‌,
 
திரு. மு. தீனபந்து, இ.ஆ.ப, ஒய்வு,
 
திரு. 7.௩.8. இராஜா, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்‌,
 
திருமதி. மல்லிகா சீனிவாசன்‌,
 
மருத்துவர்‌ திரு. ஜோ. அமலோற்பவநாதன்‌,
 
மேலும் சித்த மருத்துவர்‌ கு. சிவராமன்‌ மற்றும்‌ முனைவர்‌ நர்த்தகி நடராஜ்‌ உள்ளிட்டோர்‌ பகுதி நேர உறுப்பினர்களாகவும்‌ நியமனம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்