உணவு திருவிழாவில் பீப் பிரியாணி! – இன்று முதல் தொடக்கம்!

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (10:47 IST)
சென்னை உணவு திருவிழாவில் பீப் பிரியாணி இல்லாதது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் இன்று முதல் பீப் பிரியாணி இடம்பெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை தீவுத் திடலில் ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று நாள் உணவுத் திருவிழா நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி நேற்று முதல் உணவு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.

150 உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பலவகை உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பீப் பிரியாணி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேசமயம் பீப் பிரியாணி ஸ்டால் போட யாரும் அனுமதி கோரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் உணவு திருவிழாவில் உள்ள சுக்குபாய் ஸ்டாலில் பீப் பிரியாணி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பீப் பிரியாணி குறித்த சர்ச்சை முற்றுப்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்