6 GB RAM, 128 GB Memory.. வெறும் ரூ.7500க்கு..! POCO C71 சிறப்பம்சங்கள்!

Prasanth Karthick

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (14:42 IST)

இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் போக்கோ நிறுவனம் குறைவான விலையில் Basic மாடலில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளனர்.

 

போன் செயலிகள் நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக் கொண்டே இருப்பதால் தற்போது ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் மக்களுக்கு அதிக ரேம் மற்றும் மெமரி வசதிக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் குறைந்த விலையில் POCO C71 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

POCO C71 சிறப்பம்சங்கள்:

 
 

இந்த POCO C71 ஸ்மார்ட்போன் பவர் ப்ளாக், கூல் ப்ளூ மற்றும் டெஸர்ட் கோல்டு ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜிபி + 64 ஜிபி மாடலின் விலை ரூ.6,499 ஆகவும், 6ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.7499 ஆகவும் அறிமுக விலையில் கிடைக்கிறது. இந்த அறிமுக விற்பனை ஏப்ரல் 10ம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் நேரடி விற்பனையில் கிடைக்கிறது. இந்த சலுகையில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஏர்டெல் 50 ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்