ஒரே நாளில் 15,815 பாதிப்புகள்; 68 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா!

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (10:26 IST)
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தினசரி கொரோனா பாதிப்புகள் தற்போது 20 ஆயிரத்திற்குள் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 15,815 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,42,39,372 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,26,996 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,35,93,112 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,19,264 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்