சென்னை மாநகராட்சி கடிகாரம் 25 நாட்களுக்கு இயங்காது: அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (21:31 IST)
சென்னை மாநகராட்சி கடிகாரம் 25 நாட்களுக்கு இயங்காது: அறிவிப்பு
சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள கடிகாரம் 25 நாட்களுக்கு இயங்காது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில் 109 ஆண்டுகள் பழமையான கடிகாரம் உள்ளது
 
இந்த கடிகாரம் சரியான வகையில் பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி கட்டிடத்தின் உள்ள 109 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடிகாரத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அடுத்த 25 நாட்களுக்கு இந்த கடிகாரம் இயங்காது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்