கொரோனா அறிகுறி உள்ளவர்கள் குப்புற படுங்கள்! – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!

Webdunia
புதன், 12 மே 2021 (12:39 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சென்னை மாநகராட்சி சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டு வார பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று உள்ளவர்கள் மேற்கொள்ள சில அறிவுறுத்தல்களை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.

அதன்படி கொரோனா அறிகுறி உள்ளவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்கலாம். 2 மணி நேரம் அல்லது 4 மணி நேர இடைவெளியுடன் 16 மணி நேரம் வரை குப்புறப்படுக்கலாம். கடின உடல் உழைப்பை தவிர்த்து வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். டாக்டர்கள் பரிந்துரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்