ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Siva

திங்கள், 1 செப்டம்பர் 2025 (15:53 IST)
கல்வி உரிமைச் சட்டம் (RTE) தொடர்பான நிதி விவகாரத்தில், மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான செலவுகளை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால், இந்த நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டித் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
சென்னை உயர் நீதிமன்றம், "நிதி ஒதுக்கீடு மாநில அரசின் பொறுப்பு" என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
 
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது வாதத்தை முன்வைத்தது. அதில், கல்வி உரிமை சட்டத்தின்படி, மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதியை பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் மாநில அரசின் பொறுப்பு என்று மட்டும் தீர்ப்பளித்தது தவறு என்று தமிழக அரசு வாதிட்டது.
 
தமிழக அரசின் இந்த வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம், இது குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்