முதன்முறையாக போராட்டக் களத்தில்..! அஜித்காக களமிறங்கிய விஜய்! - பரபரக்கும் சிவானந்தா சாலை!

Prasanth K

ஞாயிறு, 13 ஜூலை 2025 (10:23 IST)

திருபுவனம் கோயில் காவலாளி அஜித்குமாரின் விசாரணை மரணத்திற்கு நீதி கேட்டு இன்று சென்னையில் நடைபெறும் தவெக கட்சி கண்டன ஆர்பாட்டத்தில் தலைவர் விஜய் கலந்துக் கொள்கிறார்.

 

திருபுவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை, நகைத்திருட்டு வழக்கில் விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற நிலையில் அவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தமிழகத்தில் காவல்துறை கஸ்டடி மரணங்கள் குறித்த பெரும் கேள்வியை எழுப்பியது.

 

இந்த கஸ்டடி மரண வழக்கு குறித்து தவெக கண்டனத்தை பதிவு செய்த நிலையில், கட்சி தலைவர் விஜய் நேரடியாக திருபுவனம் சென்று அஜித்குமார் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அஜித்குமாருக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் இன்று சென்னை சிவானந்தா சாலையில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

 

இதில் கலந்து கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கியது முதலாக விஜய் கலந்து கொள்ளும் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் இதுவாகும். தற்போது சிவானந்தா சாலையில் தவெக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து வருவதால் விஜய் செல்லும் வழியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்