200 முறை கால் செய்தும் பதிலில்லை.. ஆட்டோ டிரைவரின் மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்..!

Siva

திங்கள், 14 ஜூலை 2025 (10:09 IST)
குருகிராமில்  ஆட்டோ ஓட்டுநர் ஷைலேந்திரா  என்பவர் காணாமல் போன நிலையில், அவரது மனைவி செல்போனில் 200 முறைக்கு மேல் அழைத்தும் பதில் இல்லாததால், காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநரை சடலமாக கண்டெடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 27 வயது ஷைலேந்திரா என்ற ஆட்டோ ஓட்டுநர், ஒரு பயணியை இறக்கிவிட்டுவிட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு வருவதாக மனைவிக்கு போன் செய்தார். அதன் பின் இரவு 9 மணிக்கு மீண்டும் பேசியபோது, "இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவேன்" என்று கூறியுள்ளார். ஆனால், அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. இரவு முழுவதும் காலை வரை சுமார் 200 முறை தனது கணவருக்கு தான் செல்போனில் கால் செய்ததாகவும், ஆனால் அவரிடம் இருந்து எந்தத்தகவலும் வரவில்லை என்பதை அடுத்து, காலையில் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், ஒரு சாக்கடை அருகே ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பகுதியில் அவரது செல்போனும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதுதான் அவரது உடல் சாக்கடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கன மழை காரணமாக திறந்த சாக்கடையில் அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றும், அதனால் அவரது உயிர் போயிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
கனமழையின் போது குருகிராமில் பதிவான ஐந்தாவது மரணம் தான் ஆட்டோ ஓட்டுநர் ஷைலேந்திரா என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், ஒரு பெண் சாலை விபத்தில் பலியானதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்