தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. ஒரே வாரத்தில் ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு 15 ரூபாயும், ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் உயர்ந்தது. தங்கம் விலை உயர்ந்தது போலவே, வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு 2,000 ரூபாய் உயர்ந்துள்ளது வெள்ளிப் பிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,140
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,155
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,120
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,240
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,971
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,987
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,768
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,896
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.127.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.127,000.00