நீதி கேட்டோம்! Sorry சொன்னீங்க! பாஜக பின்னால பதுங்கிட்டீங்க! - திமுக மீது விஜய் கடும் விமர்சனம்!

Prasanth K

ஞாயிறு, 13 ஜூலை 2025 (11:37 IST)

காவலாளி அஜித் கஸ்டடி மரணத்தில் நீதிக் கேட்டு இன்று சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு தவெக தலைவர் விஜய், திமுக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் “திருபுவனம் காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு அவரது குடும்பத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுள்ளார். உண்மையிலேயே நல்ல விஷயம். அப்படியே இன்னொரு விஷயத்தையும் பண்ணிடுங்க ஸ்டாலின் சார். உங்க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் 23 விசாரணை மரணங்கள் நடந்திருக்கு. அவங்க குடும்பங்கள்கிட்டயும் மன்னிப்பு கேளுங்க.

 

அஜித்குமார் வழக்கில் மட்டும் வீட்டுமனை, அரசு வேலை, நிவாரண உதவி கொடுத்துருக்கீங்க. மீதமுள்ள 23 குடும்பங்களுக்கும் அதை ஏன் கொடுக்கல. ஏதாவது ஒரு தவறு நடந்திட்டால் ‘சாரிம்மா மன்னிச்சிடுங்க’ என கேட்டால் சரியா போய்விடுமா. 

 

சாத்தான் குளம் கஸ்டடி மரண விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டப்போது இது தமிழக அரசுக்கு ஏற்பட்ட அவமானம் என எதிர்கட்சியாக விமர்சனம் செய்தீங்க ஸ்டாலின் சார். ஆனா இப்போ நீங்களும் அதே சிபிஐகிட்ட தானே ஒப்படைச்சிருக்கீங்க. அதுக்கு பெயர் என்ன? அஜித்குமார் விசாரணையில் எந்த வித இடையூறும் இல்லாமல் நேரடி நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும் என தவெக முறையிட்டது.

 

ஆனால் நீங்க வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டு, மத்திய அரசின் பின்னால் ஒளிஞ்சுக்கிறீங்க. ஆட்சியை விட்டு போறதுக்கு முன்னாடி சட்டம் ஒழுங்கையாவது சரி செய்துட்டு போங்க. அப்படி இல்லைன்னா உங்களுடைய ஒவ்வொரு தவறுக்கும் மக்களிடம் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவர்களோடு என்றென்றும் தவெக துணை நிற்கும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்