தமிழகம் முழுவதும் இனி மழைதான்.. ஜூலை 16ல் சென்னையில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Siva

ஞாயிறு, 13 ஜூலை 2025 (15:27 IST)
தமிழகம் முழுவதும் இன்று முதல் பரவலாக மழை பெய்யும் என்றும், ஜூலை 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்றும், நாளையும் தமிழகத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும், ஜூலை 15ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஜூலை 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், ஜூலை 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மொத்தத்தில், அடுத்த வாரம் முழுவதுமே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும், குறிப்பாக சென்னையில் கனமழை பெய்யும் என்றும் வானிலை அறிவிப்பு தெரிவித்துள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்