வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்திற்கு மழை வாய்ப்பு

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (15:43 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியை அடுத்து தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் துவங்கவில்லை. இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்