மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம்; அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்

ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (10:47 IST)
தமிழகத்தில் நாட்டிலேயே முதல் முறையாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விபத்துக் காப்பீடு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

 
திருச்சியில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், மாணவிகளுக்கு விபத்துக் காப்பீடு வழங்க தமிழக அரசுபரிசீலித்து வருவதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். ஆனால், இந்த விபத்துக்காப்பீடு திட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவர்கள் மட்டும் பயன் பெறுவார்களா? அல்லது அரசு உதவி பெறும் அனைத்து பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும்  பயன்பெறுவார்களா? என்பது குறித்து தெளிவாக அமைச்சர்கள் கருத்துக்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.
 
தமிழகத்தில் 1.4 கோடி மாணவர்கள் பல்வேறு விதமான பள்ளிகளில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்