இன்றுமுதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (11:16 IST)
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாக செல்லும் வகையில், தமிழக அரசின்  சிறப்பு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்பட உள்ளன.

 
அரசு பேருந்து கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவின் மூலம் தமிழக அரசுக்கு ரூ.400 கோடி வருவாய் வந்துள்ளதாக,  தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
 
மேலும், இன்றுமுதல் 22-ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் பிற ஊர்களுக்கு இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.  அதேபோல், மாநிலத்தின் பிற ஊர்களுக்கு இடையே இன்று முதல் 3 நாட்களுக்கு 11,111 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் 24 மணிநேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணாநகர், தாம்பரம், பூவிருந்தவல்லி, சைதாப்பேட்டை, கோயேம்பேடு ஆகிய இடங்களுக்கு மக்கள் எளிதில்  செல்ல வழிவகை செய்யப்பட்டு, சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்