தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:26 IST)
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால், தென்மேற்கில் நகர்ந்து வலுவிழக்கும் என்றும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு அடுத்த 12 மணி நேரதிதில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிலக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதனால், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்