சமைக்க பயந்த மணப்பெண் தற்கொலை? – திருநெல்வேலியில் அதிர்ச்சி!

ஞாயிறு, 22 ஜனவரி 2023 (09:50 IST)
திருநெல்வேலியில் திருமணமாகவிருந்த இளம்பெண் சமைக்க கற்றுக்கொள்ள சொன்னதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கீழகோடன்குளத்தை சேர்ந்த இளம்பெண் கிறிஸ்டில்லா மேரி. 19 வயதாகும் கிறிஸ்டில்லா மேரிக்கு சமீபத்தில் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நாள்தோறும் கிறிஸ்டில்லா மேரி தனது செல்போனை பார்த்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை கண்டித்த அவரது தாய் சமைக்க கற்றுக்கொள்ளுமாறு கூறியதாகவும், அதனால் விரக்தியடைந்த இளம்பெண் விஷம் அருந்தியதாகவும் தகவல்கள் வெளியானது.

உடனடியா அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிய வருகிறது. இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்