பிப்ரவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
புதன், 1 பிப்ரவரி 2023 (16:24 IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப்ரவரி ஆறாம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூரில் நடக்கும் திருவிழா விசேஷங்கள் ஆகியவற்றின் காரணமாக உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பிப்ரவரி 6ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்ட வேற ஒரு நாளில் வேலை நாள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது