குட்கா ஊழல் - விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிய சிபிஐ கடிதம்!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (10:04 IST)
குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் , டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேரை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.


தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டு பல திடுக்கிடும் திருப்பங்கள் உருவானது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில்,  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்கக் கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிய மாநில அரசின் அனுமதி தேவை என்பதால் சிபிஐ இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இருந்து இதற்கான அனுமதி கிடைத்ததும் இந்த வழக்கில் சிபிஐ 2வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்