ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால்... தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

செவ்வாய், 12 ஜூலை 2022 (13:49 IST)
சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு குடிசைகலை நான்கு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை 4 வாரங்களுக்கு அகற்றவில்லை என்றால் சட்டம் ஒழுங்கை தமிழக அரசால் கையாள முடியவில்லை என்று கருத்து தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
அக்டோபர் மாதம் வரை அவகாசம் வழங்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற மத்திய ராணுவ படையின் உதவியை கோரலாம் என்றும் உள்ளூர் அமைச்சர்கள் சென்று பார்வையிடுவதால் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கிரமப்புகளைஅகற்றாவிட்டால் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்