இந்த போராட்டம் வன்முறையாக மாறியது என்றும் பள்ளி சொத்துக்கள் சூறையாடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.