தொழில்முனைவோருக்கு ரூ.25 லட்சம் வரை கடனுதவி! – தமிழக அரசு அறிவிப்பு!

புதன், 13 ஜூலை 2022 (09:10 IST)
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதித்த தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த காலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தொழில் முனைவோர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பலரும் மீண்டும் தங்கள் தொழிலை புதுப்பிப்பதில் பொருளாதாரரீதியான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தை செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர்கள் நேரடியாகவோ அல்லது வாரிசுதாரர் மூலமாகவோ மீண்டும் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்