விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சிறுவர்கள்: நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (09:52 IST)
விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சிறுவர்கள்: நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக விநாயகர் கோவில் ஒன்று உள்ளது என்பதும் இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நள்ளிரவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்க மூன்று சிறுவர்கள் முயற்சி செய்ததாக தெரிகிறது
 
 அந்த பக்கம் தற்செயலாக ரோந்து பணியில் வந்த போலீசார் இதை பார்த்தவுடன் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து உண்டியலில் கொள்ளை அடித்த ரூபாய் ரூ.18500 ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்