அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (16:25 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர்  மணிகண்டன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்த நிலையில் அந்த வழக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார் 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நடிகையின் தரப்பில் புகாரை திரும்ப வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்