தாயுடன் தகராறு செய்த தம்பி: அடித்து கொன்ற அண்ணன்

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (17:28 IST)
கரூரில் தாயிடம் தகறாரு செய்த தம்பியை அண்ணனே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் அம்சவள்ளி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். டிரைவராக வேலை பார்க்கும் முதல் மகன் நந்தக்குமார் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது மகன் கவுதம் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் விட்டுவிட்டு தற்போது பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி மது அருந்திவிட்டு தனது தாயிடம் வந்து சண்டை போடுவது கவுதமிற்கு வாடிக்கையாக இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு தாயுடன் தகறாரில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர் அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. பிறகு தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதை பற்றி கேட்க போன நந்தக்குமாருக்கும், கவுதமுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நந்தகுமார் பக்கத்தில் இருந்த அம்மிக்கல்லை கவுதம் தலையில் போட்டிருக்கிறார். கவுதம் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார்.

உடனடியாக கவுதமை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தகவலறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து நந்தக்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்