’குண்டு போட்ட மாதிரி திமுக கலக்கம்’ - செல்லூர் ராஜூ ‘கிண்டல்’

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (13:24 IST)
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ள 3 சிறப்பு நிதி உதவி திட்டங்களால் திமுகவினர் கலக்கம் அடைந்துள்ளதாக கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறார்.
மதுரை மாவட்டம் சமய நல்லூர் பகுதியில் உள்ள பேரவையில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது :
 
தமிழகத்தில் வறுமை கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ,2000 வழங்கப்படுகிறது. பாரத பிரதமர் மோடி நம் நாட்டு விவசாயிகளுக்கு ரு. 6000 நிதி உதவி வழங்குவதாக அறிவித்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். மேலும் பொங்களுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் முதல்வர் ரூ.1000 பரிவு வழங்கினார். 
 
இம்மூன்று திட்டங்களால் நம் நாட்டு எல்லையில் காஷ்மீரில் ஆக்கிரமிப்பு பகுதியில் ராணுவத்தினர் போட்ட குண்டைப் போல் திமுக கலங்கிப்போய் உள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும் இவ்வாறு பேசினார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்