திமுக கூட்டணியில் பாமக ? – தினமலரை கலாய்க்கும் இணையவாசிகள் !

திங்கள், 11 மார்ச் 2019 (10:07 IST)
திமுக கூட்டணியில் பாமக உள்ளது போலவும் குறிப்பிட்ட தொகுதி ஒன்றைப் பெறுவதற்காக இரண்டு கட்சிகளும் போட்டியிடுவதாகவும் தினமலர் நாளிதழ் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.

பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 7 மக்களவை சீட்களையும் 1 மாநிலங்களவை சீட்களையும் பெற்றுள்ளது. இது தமிழகத்தில் உள்ள அனைவருக்குமே தெரியும். ஆனால் தினமலர் நாளிதழ் பாமக, திமுக கூட்டணியில் உள்ளது போலவும் அரக்கோனம் தொகுதியைக் கைப்பற்றுவதற்கு பாமக வேட்பாளரும் திமுக வேட்பாளரும் போட்டி போடுவதாக செய்து வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட செய்தியில் ‘பாமக முன்னணி தலைவர்களில் ஒருவரான ஏ.கே. மூர்த்திக்கு வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதி பாதுகாப்பானதாக இருக்கும் என அந்தக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி டிக் செய்து கொடுத்துள்ளாராம்.

ஆனால் இந்தத் தொகுதியைப் பாமகவுக்கு தரக்கூடாது. அதில் தான் போட்டியிட சீட் தரவேண்டும் என கேட்டு விருப்பமனு தாக்கல் செய்துள்ளாராம்,முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்.  அதனால் கூட்டணிக்குக் கொடுப்பதா அல்லது தங்கள் கட்சியேப் போட்டியிடுவதா எனக் குழம்பி தவிக்கிறதாம் திமுக மேலிடம் . இதில் யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறதோ ?’ எனக் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவெ பாஜக மற்று இந்துத்வா நாளிதழ் எனப் பெயர் பெற்றுள்ள தினமலரை அவ்வப்போது நெட்டிசன்கள் வைத்து செய்து வருகின்றனர். இப்போது அவர்கள் காலில் சலங்கைக் கட்டிவிட்டது போல தினமலர் செய்தி வெளியிட்டுள்ளதால் காலை முதல் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்