செந்தில் பாலாஜியை போல் அல்லாமல், அமைச்சர் பொன்முடி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: பாஜக

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (11:50 IST)
அமலாக்கத்துறை சோதனையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி போல் அல்லாமல் அமைச்சர் பொன்முடி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.
 
 அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் திடீரென இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.  சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி வீடு மற்றும் விழுப்புரத்தில் உள்ள பொன்முடி உறவினர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது 
 
 அதுமட்டுமின்றி பொன்முடி மகன் கௌதம சிகாமணி எம்பி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் இந்த சோதனை குறித்து கூறிய போது செந்தில் பாலாஜி போல் அல்லாமல் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் திமுக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
தகுந்த ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை செய்யாது என்றும்  அமலாக்கத்துறை தனது கடமையை செய்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்