பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்று கொள்வேன்: முதல்வர் பதவி குறித்து ஷிண்டே..!

Mahendran

புதன், 27 நவம்பர் 2024 (17:23 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற உள்ள நிலையில், இன்னும் முதல்வர் யார் என்று அறிவிக்கப்படாத நிலையில், தற்போதைய முதல்வர் ஷிண்டே"பிரதமர் மோடி எடுக்கும் முடிவு ஏற்றுக்கொள்வேன்" என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அந்தக் கட்சியைச் சேர்ந்த பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நிருபர்களை சந்தித்த ஷிண்டே "மக்கள் எங்களுக்கும் நாங்கள் அளித்த திட்டங்களுக்கும் ஆதரவளித்து வாக்களித்துள்ளனர். மக்களுக்காக பணியாற்றினேன். இறுதிவரை அவர்களுக்காகவே பணியாற்றுவேன். முதல்வராக இல்லை என்றாலும் ஒரு தொண்டராக பணியாற்றுவேன்.

நான் என்றுமே என்னை முதல்வராக கருதியது இல்லை. சாமானிய மனிதன் தான் நான். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கின்றனர். மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வேன். அவர் எங்கள் குடும்பத்தின் தலைவர். அவரது முடிவை பாஜகவினர் எப்படி ஏற்றுக்கொள்கிறார்களோ, அதே போல் நாங்களும் ஏற்றுக்கொள்வேன்.

என்னால் எந்த பிரச்சனையும் வராது. முதல்வராக யாரை கூட்டணி முடிவு செய்கிறதோ, அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு" என ஷிண்டே கூறியுள்ளார்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்