அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு..!

திங்கள், 17 ஜூலை 2023 (11:26 IST)
அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில், தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடியின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு அதிகரிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
 
தலைமைச் செயலக நுழைவு வாயிலில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், தீவிர சோதனைக்கு பிறகே, தலைமைச் செயலகத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்தபோது தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்