அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு வரும் தடயவியல் நிபுணர்கள்: பரபரப்பு தகவல்..!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (11:44 IST)
அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வருகை தந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது 
 
அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வருகை தந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை அழைத்ததன் பெயரில் தடயவியல் நிபுணர்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
அமைச்சர் பொன்முடியின் வீட்டில் டிஜிட்டல் முறையில் உள்ள ஆவணங்களை கண்டறியும் வகையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சோதனையின் நடைபெற்று வருவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்