குஷ்புவுக்கு ஆதரவாக டுவீட் செய்த பாஜக பிரமுகர்

Webdunia
வியாழன், 17 மே 2018 (22:15 IST)
கடந்த சில நாட்களாகவே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும், காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்புவுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்த நிலையில் திருநாவுக்கரசரை பதவியில் இருந்து இறக்குவேன் என்று குஷ்பு சவால் விட்டார்.
 
அதற்கு திருநாவுக்கரசர் ஏற்கனவே குஷ்பு திமுகவிடம் செருப்பு மற்றும் முட்டை வீச்சு அடி பெற்றவர். அதே நிலை காங்கிரஸ் கட்சியிலும் ஏற்படும் நிலையை அவர் உருவாக்க வேண்டாம் என்று கூறினார். இதற்கு குஷ்புவின் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் பாஜக பிரமுகரும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறுபவருமான நாராயனன் திருப்பதி என்பவர் தனது டுவிட்டரில் கூறியபோது, 'குஷ்புவுக்கு தி.மு.க.வில் நடந்தது போல், காங்கிரஸ் கட்சியிலும் முட்டை வீச்சு, செருப்பு வீச்சு நடத்தப்படும் நிலை ஏற்படும் :திருநாவுக்கரசர் கூறியிருந்தது சரியில்லை. ஆயிரம் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், சொந்த கட்சியினரை அதுவும் ஒரு பெண்ணை செருப்பால் அடிப்பேன், முட்டையால் அடிப்பேன் என்றெல்லாம் சொல்வது தரம் தாழ்ந்த அரசியல். ஒரு தேசிய கட்சியின் தலைவருக்கு  இது அழகல்ல. கேவல அரசியலின் உச்சகட்டம். வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்