இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா, மேகாலயா, மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக உள்ளது காங்கிரஸ் கட்சிதான். ஆனால் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 16 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ், தனிப்பெரும் கட்சி என்ற வகையில் தங்களை ஆட்சி அமைக்க விடுக்க வேண்டும் என்றும், மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் கவர்னரிடம் கோவா காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கோவாவில் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், காங்கிரஸின் 16 கோவா எம்எல்ஏக்களும் அணிவகுப்பாக சென்று ஆளுநரை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளதால் ஆளும் பாஜக கூட்டணி அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் கோவா ஆளுனர் காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்பாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்