திமுக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்..!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (13:08 IST)
திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, திமுக இளைஞரணி சார்பில்  இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்ட நிலையில் இந்த பேரணியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சேலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேரணியை தொடங்கி வைத்தார். மொத்தம் 13 நாட்கள் 8,647 கிலோ மீட்டர்கள் இருசக்கர வாகன பேரணி நடைபெறுகிறது

234 சட்டமன்ற தொகுதிகளிலும் வலம் வந்து சேலத்தில் பேரணி நிறைவடையும் என்றும், பிரசார பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்கிறது என்றும் திமுக இளைஞரணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்