கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

Prasanth Karthick

வியாழன், 4 ஜூலை 2024 (11:11 IST)

பிரபல மலையாள நடிகரும், எம்.பியுமான சுரேஷ் கோபி தமிழ்நாடு தனது விருப்பத்திற்குரிய மாநிலம் என கூறியுள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. தமிழில் இவர் நிரபராதி, கற்பூர முல்லை, தீனா, சமஸ்தானம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் கேரளாவில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற சுரேஷ் கோபிக்கு மத்திய பெட்ரோலிய மற்றும் சுற்றுலா அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி “கேரள மக்களின் ஆசீர்வாதத்தால் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். ஆனால் கேரளாவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பியாக செயல்படுவேன். எனது கீழ் உள்ள பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையில் தமிழ்நாட்டிற்காக திட்டங்கள் பல உள்ளது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து தரலாம். பெட்ரோலியம் துறை சார்ந்து தற்போது கற்றுக் கொண்டு வருகிறேன்.

கேரளாவில் பிறந்தாலும் என்னை வளர்த்து, நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது தமிழ்நாடு. நான் தமிழ்நாட்டை நேசிக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்