அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்: என்ன காரணம்?

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (13:00 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவருக்கும்  தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  

பிரதமர் நரேந்திர மோடியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாக தேர்தல் ஆணையம் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  

ஆம் ஆத்மி கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து உறுதி செய்யப்படாத தகவல்கள் பகிரப்பட்டதாகவும் இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய ஒன்று என்றும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  

அதேபோல் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பெல் நிறுவனத்தை மோடி தனது தொழில்துறை நண்பர்களுக்கு வழங்கி விட்டார் என அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசி உள்ளார்.

இதையடுத்து இருவரும் வரும் வியாழக்கிழமை இரவு 8 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்