அரிக்கொம்பனை அடக்க களம் இறங்கிய அரிசி ராஜா! – கம்பத்தில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (08:58 IST)
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றி திரியும் அரிக்கொம்பன் யானை தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.



கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த ஒற்றை காட்டுயானை அரிக்கொம்பன். கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான விளைநிலங்களை நாசம் செய்துள்ள அரிக்கொம்பன் 8 பேரை தாக்கி கொன்றுள்ளது.

கடந்த மாதம் அரிக்கொம்பனை பிடித்த கேரள வனத்துறை மேதகானம் வனப்பகுதியில் விட்டனர். தற்போது அங்கிருந்து நீர்பிடிப்பு பகுதிகள் வழியாக தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் நுழைந்த அரிக்கொம்பன் நகர வீதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. பின்னர் அங்குள்ள தோப்பு பகுதிகள் வழியாக காட்டுப்பகுதிக்குள் நுழைந்துள்ளது.

கடந்த 27ம் தேதி கம்பம் வீதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானை பால்ராஜ் என்பவரை மூர்க்கமாக தாக்கியது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் உயிரிழந்துள்ளார்.

அரிக்கொம்பனை பிடிக்க அரிசி ராஜா எனப்படும் முத்து உள்ளிட்ட 3 கும்கி யானைகள் களமிறக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒற்றை காட்டு யானையாக வலம் வந்து பல உயிர்களை பறித்த அரிசி ராஜாவை வன அதிகாரிகள் பிடித்து கும்கி யானையாக பழக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்