தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் பரணி வித்யாலயா மாணவிக்கு பாராட்டு

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (22:38 IST)
36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாப்ட் டென்னிஸ் போட்டி அண்மையில் குஜராத் மாநிலத்தில் வாதோதராவில் நடைபெற்றது.

இப்போட்டியில் பரணி வித்யாலயா மாணவி சுஷ்மிதா சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழக அணியின் சார்பாக பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இவர் அண்மையில் அகமதாபாத்தில் நடைபெற்ற 16-வது ஜூனியர் தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் தனி இரட்டையர் & குழுப்பிரிவில் இரு தங்கப்பதக்கங்களை வென்றார் மற்றும் புது தில்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற 3-வது ஃபெடரேசன் கோப்பை சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குழுப்பிரிவில் தங்கப்பதக்கமும், மேலும் கடந்த மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சாப்ட் டென்னிஸ் குழுமம் நடத்திய சர்வதேச சாப்ட் டென்னிஸ் தனி நபர் போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச சாதனை மாணவி சுஷ்மிதா மற்றும் அவருக்கு டென்னிஸ் பயிற்சியளித்த பயிற்சியாளர் மோகன் மற்றும் வினோத்குமார் ஆகியோருக்கு இன்று பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளியின் தாளாளர் S.மோகனரங்கன் தலைமை தாங்கினார், செயலர் பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் கல்வி நிறுவனங்களின்  முதன்மை முதல்வர் C.ராமசுப்ரமணியன் சிறப்புரையாற்றுகையில் “மாணவர்கள் சிறு வயது முதல் படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தைப் பெறுகிறார்கள். மாணவி சுஷ்மிதா போன்று அனைத்து மாணவர்களும் அவரவர்க்கு விருப்பமான துறையில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறினார். பரணி வித்யாலயா முதல்வர் s.சுதாதேவி, துணை முதல்வர் R.பிரியா, பரணி பார்க் முதல்வர் K.சேகர் மற்றும் இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.
 
புகைப்படம்: பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பாராட்ட பெற்ற சர்வதேச சாதனை மாணவி சுஷ்மிதா, அவரின் பெற்றோர்கள் அவர்களை பாராட்டும் செயலர்.பத்மாவதி மோகனரங்கன், முதன்மை முதன்மை முதல்வர் C.ராமசுப்ரமணியன், 

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்