’கேப்டன் மில்லருக்கு அடுத்த தனுஷ் படம்: ஜனவரியில் படப்பிடிப்பு என தகவல்!

திங்கள், 3 அக்டோபர் 2022 (19:13 IST)
’கேப்டன் மில்லருக்கு அடுத்த தனுஷ் படம்: ஜனவரியில் படப்பிடிப்பு என தகவல்!
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இதற்கு அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது 
 
நடிகர் தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் உருவாகிவரும் ’கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
இந்த படத்தை மூன்று மாதங்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்