பாஜகவில் நடிகை குஷ்புவுக்கு கூடுதல் பதவி: அண்ணாமலை வாழ்த்து..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (13:51 IST)
நடிகை குஷ்பூவுக்கு பாஜக மேலிடம் கூடுதல் பதவி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போது பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் நிலையில் தற்போது அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்ற பதவியையும் பெற்றுள்ளார். இதுகுறித்து அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ள நிலையில் நடிகை குஷ்பூவுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
பாஜக தேசிய குழு உறுப்பினரான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் பெண்கள் உரிமைக்காக அவர் தொடர்ந்து போராடியதற்கு கிடைத்த அங்கீகாரம் தான் இது என்றும் தெரிவித்துள்ளார். 
 
அண்ணாமலையின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள குஷ்பு, தங்களின் ஆதரவும் மதிப்பும் எனக்கு என்றும் ஊக்கமாக இருந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்