ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

வியாழன், 23 பிப்ரவரி 2023 (20:49 IST)
தேர்தலின் போது பாஜக வாக்குறுதி அளித்த ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு எங்கே என காங்கிரஸ் தலைவர் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதும் இதனால் வேலை இல்லா திண்டாட்டம் பெருகி உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிவிப்பின்போது ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து கூறிய போது மத்திய அரசு ஒரு ரப்பர் சார்பாக மாறிவிட்டது என்றும் இரும்பு ஆலைகள் ஐஐடிகள் போன்ற நாட்டின் முக்கிய சொத்துக்களை உருவாக்கியவர் உருவாக்கியது யார் என்ற கேள்வி எழுப்பினார்.
 
 நாங்கள் போலிகள் அல்ல என்றும் நாட்டை உருவாக்கியவர்கள் என்றும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள் என்றும் ஆனால் நீங்கள் உறுதி அளித்த ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனாவின் இந்த கேள்விக்கு பாஜகவினர் என்ன பதில் சொல்லப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்